Pages

Sunday, November 24, 2013

தனிப்பட்ட கருத்துகள் என்ற பெயரில் போராட்டங்கள் திசை திருப்பப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகின்றது.

பாதிக்கப்பட்டவர்களை ஆதரித்துக் குரல் எழுப்புவதன் மூலம் அவர்களின் ஆதரவைப் பெற முயற்சிக்கப்படுகிறதோ என்ற சந்தேகமும் உடன் எழுகின்றது.எத்தனைக் கோரிக்கைகள் இருந்தாலும் அத்தனையையும் வென்றெடுக்கும் மன உறுதி நமக்கு இல்லாமல் போனதேன்? இதை மட்டுமே முன் நிறுத்த வேண்டும். மற்றதெல்லாம் பின்தள்ளப்பட வேண்டும் என்பதும் ஏற்புடையதல்ல. ஏற்கனவே ஆசிரியர்களின் ஒற்றுமையை வலியுறுத்திடாமல் இயக்கங்களின் வலிமைகளை வலியுறுத்தியதால் தான் வெற்றியை தவறவிட்டு தவித்துக் கொண்டிருக்கிறோம். 

7 அம்சக் கோரிக்கைகளில் எதுவும் சாதாரண பாதிப்பு என்று எடுத்துக் கொள்ள முடியாது. பாதிப்புகளில் அதிகம் என்றும் குறைவென்றும் சொல்ல முடியுமா?
பிரிவினை வளர்க்கும் வாதங்களையும் போக்குகளையும் கைவிட்டு முன்னெடுத்துச் செல்லும் அனைத்து கோரிக்கைகளையும் வென்ற பின்னே தான் வீடு திரும்புவேன் என்று சொல்வதற்குப் பதில் களத்தை திசை திருப்பும் முயற்சியை என்னவென்று சொல்வது. 
சில கேள்விகள் : 2800 தர ஊதியத்தை உயர்த்துவதற்காக எந்த இயக்கமும் போராடவில்லையா? அப்பொழுதெல்லாம் முழு வீச்சோடு கலந்து கொண்டு தங்கள் வீரியத்தை காண்பிக்க மறந்து விட்டோம். இன்று ஒன்றுபட்டு வலிமையான சக்தியாக உருவாகியுள்ளோம். பாதிப்புகளை ஒவ்வொன்றாக களைய ஒவ்வொரு கோரிக்கையாக வைத்துப் போராட்டம் நடத்த முடியுமா? அதற்கான கால அவகாசம் உள்ளதா? 
போராட்டத்தை விரைவுபடுத்தவும் வலிமைபடுத்தவும் முன்னெடுத்துள்ள அத்தனை கோரிக்கைகளையும் வென்றெடுக்கும் வரையிலும் பின்வாங்குவதில்லை என்ற உறுதிமொழியையும் 100 சதவீதம் ஆசிரியர்களை களத்தில் பங்கேற்க வைப்பதிலும் தான் நமது வெற்றி உள்ளதே தவிர பிரிவினை கருத்துகளை வெளிப்படுத்துவதில் அல்ல...


செய்தி : தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, நாமக்கல் 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.