Pages

Saturday, November 30, 2013

எஸ்.எம்.எஸ். கட்டணம்: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்!

வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுஞ்செய்திகளுக்கு, ஏற்ற வகையில் அதற்கான கட்டணத்தை பிடித்தம் செய்து கொள்ள வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
பொதுத் துறை வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் குறுஞ்செய்திகளுக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும், ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட ஒரு தொகையை குறுஞ்செய்திகளுக்காக பிடிக்கக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.  ஒவ்வொரு வாடிக்கையாளரின் கணக்கிலும் நடக்கும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து அந்த வாடிக்கையாளரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அந்த குறுஞ்செய்திகளுக்காக வங்கிகள் ஆண்டுக்கு ரூ.100 அல்லது ரூ.60 என்று அவர்களது வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யும் முறை அமலில் உள்ளது. ஆனால், அவ்வாறு ஒரு தொகையை நிர்ணயித்து அதனை அனைத்து வாடிக்கையாளர்களின்கணக்கில் இருந்தும் பிடிக்காமல், ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் அனுப்பப்படும் குறுஞ்செய்திக்கு ஏற்ற வகையில் அதற்கான கட்டணத்தை பிடித்தம் செய்து கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.