Pages

Thursday, November 21, 2013

தொலைதூரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு: விண்ணப்பதாரர்கள் கவலை

உதவிப் பேராசிரியர் பணியிட விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் 25ம் தேதி முதல் சென்னையில் நடக்க உள்ள நிலையில் தங்கள் சொந்த மாவட்டங்களிலேயே சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ள விண்ணப்பதாரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,093 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நேரடி தேர்வுகள் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை மே மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) வெளியிட்டது.

தொடர்ந்து மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் வரும் 25ம் தேதி முதல் சென்னை நந்தனத்திலுள்ள ஆண்கள் அரசு கலைக் கல்லூரி, காமராஜர் சாலையிலுள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், அண்ணா சாலையிலுள்ள காயிதே மில்லத் பெண்கள் அரசுக் கல்லூரி ஆகிய மூன்று மையங்களில் நடக்கின்றன.

விண்ணப்பதாரர்களுக்கான அழைப்புக் கடிதம், அடையாளச் சான்றிதழ், சான்றிதழ் சரிபார்ப்பு படிவம் உள்ளிட்ட அனைத்தும் டி.ஆர்.பி., இணைய தளத்தில் ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இவற்றை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சரிபார்ப்பில் பங்கேற்க வேண்டும்.
 
இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த மாவட்டங்களிலே சரிபார்ப்பு மையங்கள் அமைத்து பணிகள் மேற்கொள்ள வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
நிச்சயம் பங்கேற்க வேண்டும் என்பதால் அறிவிப்பு தேதிக்கு முன்னதாகவே சென்னை செல்ல வேண்டியுள்ளது. இதனால், 32 மாவட்டங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கும் போக்குவரத்து, தங்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு அதிக செலவு ஏற்படுவதுடன், வீண் அலைச்சலும் உண்டாகிறது.
கர்ப்பமாக உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர் நீண்ட தூரம் பயணம் செய்வது கடினம். எனவே, ஒவ்வொரு மாவட்டங்களிலும் சரிபார்ப்பு மையங்கள் அமைக்க டி.ஆர்.பி., முன் வர வேண்டும்." இவ்வாறு, அவர்கள் கூறினார்.


இதுகுறித்து, விண்ணப்பதாரர்கள் கூறியதாவது: "கடந்த 2011ம் ஆண்டு நடந்த உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் எங்களது சொந்த மாவட்டங்களிலே நடந்தது. தற்போது சென்னையில் நடத்துவதாக டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.