மதுரையில் வாகனங்களை கண்காணித்து சோதனையிடும்படி கலெக்டர் சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து வடக்கு ஆர்.டி.ஓ., ஆய்வாளர்கள் ஆகியோர் நகரின் பல பகுதிகளில் சோதனை நடத்தினர்.
இதில் 29 ஆட்டோக்களை சோதனையிட்டு தகுதிச் சான்று இல்லாதது, சீட்டை மாற்றி அமைத்தது உட்பட பல்வேறு முறைகேடுகளுக்காக ரூ. 47,800 அபராதம் விதித்ததுடன் 12 ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். இரு பள்ளி வாகனங்களை சோதனையிட்டு விதிப்படி இல்லாத காரணங்களுக்காக ரூ. 700 அபராதம் விதிக்கப்பட்டது.
அதிகாரிகள் கூறுகையில், "பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி வரும் பல வாடகை வாகனங்கள் முறைப்படி ஆர்.டி.ஓ., அனுமதி பெறுவதில்லை. உரிய அனுமதி பெற்றே இயங்க வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை உறுதி" என்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.