மதுரை மாவட்டத்தில் ஆங்கில பாடத்தில் தேர்ச்சியை அதிகரிக்க அரையாண்டு தேர்வு விடுமுறையில் ஆசிரியர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டார்.
கோர்ட் வழக்கில் ஆஜராக நேற்று மதுரை வந்த அவர், ஒத்தக்கடை ஆண்கள், மாயாண்டிபட்டி, மாங்குளம் மற்றும் வள்ளாலபட்டி அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு செய்தார். தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க தலைமையாசிரியர்களை வலியுறுத்தினார்.
கடந்தாண்டு ஆங்கில பாடத்தில் மாணவர்கள் தேர்ச்சி குறைந்ததால், ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் குறைந்ததை கல்வி அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதையடுத்து, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், ஆங்கில பாடத்தில் "வீக்"கான மாணவர்களை கண்டறிந்து அரையாண்டு தேர்வில் சிறப்பு வகுப்புகள் எடுக்க வேண்டும்.
ஆங்கில பாடம் எவ்வாறு எடுப்பது என்பது குறித்து, ஆசிரியர்களுக்கும் சிறப்பு வகுப்பு எடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பின், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. சி.இ.ஓ., அமுதவல்லி, டி.இ.ஓ.,க்கள் ஜெயமீனா தேவி, சீமான், ரவிக்குமார் உட்பட கலந்துகொண்டனர்.
உதவி பெறும் பள்ளிகளில் தகுதி தேர்வு தேர்ச்சி பெறாமல் "டிஸ்மிஸ்" செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அதற்கான உத்தரவுகளை விரைவில் அனுப்பி வைக்கவும், பிளஸ் 2 கணினி பாட ஆசிரியர்களின் கற்றல் பணிகளையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டார். கோர்ட் வழக்குகள் உள்ள ஆவணங்களையும், மாவட்ட மைய நூலகத்தையும் அவர் ஆய்வு செய்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.