Pages

Tuesday, November 26, 2013

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்க உள்ளுர் விடுமுறை விபரம் சேகரிப்பு.

லோக்சபா தேர்தல் தேதியை முடிவு செய்ய, 2014 ஜனவரி முதல் ஜூன் வரை அரசு மற்றும் உள்ளூர் விடுமுறை விபரங்களை அனுப்ப, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.லோக்சபா தேர்தல் 2014க்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் துவக்கியுள்ளது.


ஓட்டுச்சாவடி செயல்படும் பள்ளிகளின் கட்டட தரம், சாய்தளம், பாதுகாப்பு உள்ளிட்ட விபரங்களை சேகரித்து அனுப்ப, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.கடந்த லோக்சபா. சட்டசபை தேர்தல்களின் போது, ஓட்டுச்சாவடிகளில் நடந்த அசம்பாவிதங்கள் விபரங்களையும் சேகரித்து அனுப்ப வேண்டும்.

லோக்சபா தேர்தல்:


2014 லோக்சபா தேர்தலை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அலுவலர்களான கலெக்டர்கள், 2014 ஜனவரி முதல் ஜூன் வரை அரசு விடுமுறை, மாவட்ட வாரியாக விடப்படும் உள்ளூர் விடுமுறை குறித்த விபரங்களை வழங்கவும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தேர்தலின் முதற்கட்ட பணியாக, தேர்தல் அறிவித்த நாள் முதல், கட்சிகள் "டிவி'களில் விளம்பரங்கள் செய்தால், அவற்றை செலவு கணக்கில் ஏற்ற, "டிவி' விளம்பரங்களை கண்காணிக்கும் குழுவை மாநில, மாவட்ட அளவில் ஏற்படுத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.