Pages

Wednesday, November 20, 2013

இந்திய பள்ளிகளில் பணியாற்ற சீன ஆசிரியர்கள் தயார்

இந்திய பள்ளிகளில் பணியாற்றுவதற்காக சி.பி.எஸ்.சி . பள்ளி நிர்வாகம் 25 சீன ஆசிரியர்களை நியமனம் செய்ய முடிவெடுத்துள்ளது. கடந்த 2011-12-ம் ஆண்டிலிருந்து சீனாவுடனான வர்த்தம் அதிகரித்துள்ளதையடு்த்து தலைநகர் புதுடில்லியில் சி.பி.எஸ்.சி மற்றும் தனியார் பள்ளி நிறுவனங்களில் சீன மொழிகளை கற்போரி்ன் எண்ணிக்கை அதி்கரித்து வருகிறது.
இதனையடு்த்து முதற்கட்டமாக வரும் டிசம்பர் மாதத்தில் சுமார் 25 ஆசிரியர்களை பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அரசு பள்ளிகளில் ஐந்து ஆசிரியர்கள், ஜவஹர் நவோதயா வித்யாலயாஸ் பள்ளிகளில் ஐந்து ஆசிரியர்கள், கேந்திர வித்யாலா பள்ளிகளில் ஐந்து ஆசிரியர்கள், மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 10 பள்ளிகள் என மொத்தம் 25 ஆசிரியர்கள் நியமி்க்கப்பட உள்ளனர் என சி.பி.எஸ்.சி சேர்மன் வினீத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

கடந்த 2010-ம்ஆண்டில் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த கபில் சிபல் மாணவர்களிடையே சீன மொழி கற்கும் ஆர்வத்தை கண்டு சுமார் 200 ஆசிரியர்கள் நியமி்க்கப்படுவர் மேலும் 2011-12-ம் கல்வி யாண்டில் சி.பி.எஸ்.சி., பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் இருந்து 3-வது விருப்ப பாடமாக சீன மொழி அறிமுகப்படுத்தப்படும் என கூறினார்.

முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட போது இதற்கான முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இருப்பினும் தற்போது சீனாவின் ஹன்பான் பகுதியில் இருந்து ஆசிரியர்க் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான தங்குமிடம் மற்றும் ஊதியம் போனறவற்றை கூட்டாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்யப்படும் என ஜோஷி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.