மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க கோரி தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கோவை மாவட்ட ஆசிரியர் கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
செயற்குழு கூட்டம்
தமிழக ஆசிரியர் கூட்டணி கோவை மாவட்ட செயற்குழு கூட்டம் கோவையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
போராட்டத்துக்கு ஆதரவு
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மத்திய அரசு போல் தமிழகத்து இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம், மற்றும் பங்களிப்பு, ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் கூட்டு போராட்டத்துக்கு ஆதரவு அளித்தும் அதில் கலந்து கொள்ளவும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.
கோவை மாவட்டத்தில் பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் ஆயிரத்துக்கும் ஏராளமான தொடக்க,நடுநிலைப்பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இவற்றில் கழிப்பிடம் மற்றும் பள்ளி வளாகத் தூய்மை பணிகள் அந்தந்த பேரூராட்சி மற்றும் ஊராட்சி மன்ற துப்புரவு பணியாளர்களால் சரிவர மேற்கொள்ளப்படுவதில்லை.
அந்த பள்ளிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
வேலை நாட்களாக...
ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம் நடக்கும் உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில் உதவி தொடக்க கல்வி அலுவலர் மற்றும் பிரிவு எழுத்தர்கள் பெரும்பாலும் இருப்பதில்லை.
ஆசிரியர் குறை தீர் விண்ணப்பங்கள் மீது அன்றே உத்தரவு உத்தரவுகள் வழங்கப்பட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
கல்வி வணிக மயமாக்குவதை கைவிட வேண்டும்.பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய கூட்ட நாட்களை வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும்.
தாய் மொழிகல்வி கற்பிக்கும் முறையும்,பொதுப்பள்ளி மற்றும் அருகாமை பள்ளி திட்டமும் அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியை தவிர பிற பணிகளை தவிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.