Pages

Sunday, November 24, 2013

தினமலருக்கு பதில் பள்ளிக்கு "டிமிக்கி' கொடுக்கும் ஹெச்.எம்.,கள் - தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாமக்கல்

கல்வியாளர்களின் இந்தக் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிறோம். முதலில் மாலையில் தலைமையாசிரியர் கூட்டங்கள் என்பதே அடிப்படையில் தவறானது. மாலை 4 மணிக்கு தலைமை ஆசிரியர் கூட்டங்களை நடத்தும் ஒரு சில அலுவலர்கள் தேவையில்லாமல் கூட்டத்தை ஜவ்வாக இழுத்து 6 அல்லது 7 மணி வரை நடத்துகின்றனர்.
இதில் நீண்ட தொலைவில் இருந்து வரும் பெண் தலைமையாசிரியர்கள் நிலை மற்றும் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? அரசாங்கம் கொடுக்கும் வேலைகள் கொஞ்சநஞ்சமல்ல.. கல்விப்பணியை சிதைக்கும் முழுவேலையையும் அரசும் கல்வித்துறையுமே செய்து வருகிறது. வெளியில் இருந்து சொல்பவர்கள் எல்லாம் அப்பணிகளின் சுமைகளை அறியாதவர்கள். எடுத்துக்காட்டாக EMIS பணியையே எடுத்துக் கொள்ளலாம். விழி பிதுங்குகிறது. முதலில் ஆசிரியர்களுக்கு ஆசிரியப்பணியை மட்டும் வழங்கச் சொல்லிவிட்டு அதன்பின் இதுபோன்ற அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளை சொல்லச் சொல்லுங்கள். நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து கொண்டு பிறரை விமர்சிப்பது என்பது யாருக்கும் எளிது. களத்தில் இருக்கும் பிரச்னைகளை நேரிடையாக அறிந்து அதன்பின் கருத்துகளை வெளியிட கருத்தாளர்களுக்கு அறிவுறுத்துங்கள். எனக்கு ஒரு சந்தேகம்.."கருத்துகள் சொல்லும் எந்த கல்வியாளரும் பாடம் சொல்லிக் கொடுத்து நாங்கள் பார்த்ததேயில்லை" களத்தில் உள்ளவர்களின் கருத்துகளை பெற்று பதிவிடுங்கள்

நண்பரே இன்றைய சூழலில் யாரும் தலைமைஆசிரியராக வர விரும்பமாட்டார்கள். இரண்டு நாளைக்கு ஒருமுறை H.M MEETING, particulars, record maintance என ஏராளமான வேலைகள் பாடம் எடுக்க எங்க விடுடாற்க.

2 comments:

  1. எந்த நாட்டில் ஆசிரியர்கள் மதிக்கப்படுறார்களோ அந்த நாடு மிக வேகமாக வளர்ச்சி பெறும் என்பதை கல்வியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

    ReplyDelete
  2. வருவாய் துறை பார்க்கவேண்டிய வேலைகளை ஆசிரியர்களிடம் ஒப்படைத்தால்அவர்கள் எப்படி கல்வி கற்ப்பிப்பது?

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.