Pages

Saturday, November 30, 2013

மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி : நிறுவன இயக்குநர் பள்ளிகளில் ஆய்வு

அரசு பள்ளி களை மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் முனைவர் எஸ். கண்ணப்பன் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.


கொன்றைக்காடு பள்ளி யில் ஆய்வு மேற்கொண்ட கல்வி இயக்குநர் வகுப்பறை களை பார்வையிட்டார். மாணவர்களின் கல்வித்தரம் குறித்து கேட்டறிந்தார். பின் னர் புதிதாக கட்டப்பட்ட கழிவறை மற்றும் பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற் கொண்டார். அதன் பின்னர் பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை ஆய்வு செய்தார்.

பில்லங்குழியில் அமைந் துள்ள அனைவருக்கும் கல்வி இயக்க மாற்றுப் பள்ளி யினை பார்வையிட்ட தோடு, பள்ளியில் சேர்க்கப் பட்டுள்ள நரிக்குறவர் இனத் தைச் சேர்ந்த 62 மாண வர்களையும் ‘எண்ணறிவு, எழுத்தறிவு’ பெற்ற மாண வர்களாக உருவாக்குமாறு பணியிலிருந்த மூன்று ஆசி ரியர்களுக்கும் அறிவுறுத் தினார்.

ஆய்வின் போது மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் (பொறுப்பு) ஜி. ராமானுஜம், கும்பகோணம் வட்டார வள மைய மேற் பார்வையாளர் எஸ்.இளங் கோவன், தஞ்சாவூர் வட் டார வளமைய மேற்பார் வையாளர் ராஜராஜன், தக வல் சாதன அலுவலர் மார்ட்டின் ஆகியோர் உட னிருந்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.