Pages

Thursday, November 21, 2013

பள்ளி ஆசிரியைகளை மிரட்டவிஷக்காய் தின்ற மாணவர்

மதுரை அருகே பள்ளி ஆசிரியைகளை மிரட்டுவதற்காக விஷக்காய் தின்ற மாணவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக புதன்கிழமை சேர்க்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் தேனூர் பகுதியைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகன் மதுசூதனன்(17). சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவர். இவர் சரியாக பள்ளிக்கு வருவதில்லை என்றும், ஒழுக்கமாக நடந்துகொள்வதில்லை என்றும் புகார் கூறப்படுகிறது. ஆகவே பெற்றோரை பள்ளிக்கு அழைத்துவரவேண்டும் என ஆசிரியைகள் கூறியுள்ளனர்.

இந்தநிலையில், புதன்கிழமை காலையில் பள்ளிக்கு வந்த மாணவர் திடீரென தான் வைத்திருந்த விஷக்காயை தின்றதாகக் கூறப்படுகிறது. உடனே அவரை ஆசிரியைகள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் மாணவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் பொய்கைக்கரைப்பட்டியில் 6 மாணவிகள் விஷம் சாப்பிட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சமீப காலமாக ஆசிரியர், ஆசிரியைகளை மிரட்டும் வகையில் மாணவ, மாணவியர் தற்கொலைக்கு முயல்வது அதிகரித்திருப்பதாகவும், இதனால் கண்டித்து அவர்களுக்கு ஒழுக்கத்தையும், கல்வியையும் கற்பிக்க முடியவில்லை என்றும் ஆசிரியர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

1 comment:

  1. ipdilam apnnuna appo teachers enna than pannuvanga
    ippo students techersku payappadala teachers than students ku payappaduranga

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.