கரூர் அருகே பசுபதிபாளயைம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரது மகள் ராகினி, 13. இவர், வடக்கு பசுபதிபாளயைம் பகுதியில் உள்ள புனித மரியன்னை உயர்நிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை, பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த ராகினி, அன்றிரவு, 7.30 மணிக்கு வீட்டில் யாரும் இல்லாத போது, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராகினி உடலை, போலீசார் கைப்பற்றி, கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வயிற்று வலியால், ராகினி தற்கொலை செய்து கொண்டதாக, பசுபதிபாளயைம் போலீசார் கூறினர். ஆனால், கரூர் அரசு மருத்துவமனைக்கு வந்த உறவினர்கள், பள்ளியில் ஆசிரியர் திட்டியதால், மனமுடைந்த ராகினி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.பசுபதிபாளயைம் எஸ்.ஐ., பிரித்திவிராஜ் தலைமையில் போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று பகல், 12 மணிக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ராகினியின் உடலை, அவரது பெற்றோர் பெற்றுச் சென்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.