Pages

Monday, November 18, 2013

தகுதி தேர்வை காரணம் காட்டி "டிஸ்மிஸ்' தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு

தொடக்க கல்வித் துறைக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளில் படிக்கும் 2012-13 மாணவ, மாணவிகளின் விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இப்பணிகளால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுவதால் இதற்காக தனி நபர்களை நியமித்து கொண்டு இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். 

ஆசிரியர் தகுதி தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தகுதி தேர்வைகாரணம் காட்டி பள்ளிகளில் 11.10.2011க்கு பின்னர் நியமனம் செய்யப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளை டிஸ்மிஸ் செய்யும்உத்தரவு நடவடிக்கையை தமிழக முதல்வர் நேரில் தலையிட்டு கைவிட வேண்டும்.
6வது ஊதிய குழுவில் முரண்பாடுகளை களைய வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இதுசம்பந்தமாக ஆசிரியர் இயக்கங்களை அழைத்து முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். 

பார்லிமென்ட் தேர்தலில் பெண் ஆசிரியர்களை அந்தந்த பகுதிகளிலேயே தேர்தல் பணிகளை மேற்கொள்ள செய்ய வேண்டும் .

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.