சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல், மருத்துவப்படிப்புகளுக்கான அனுமதிச் சேர்க்கை வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு அரசு கவுன்சலிங் மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ் மீனா செவ்வாய்க்கிழமை கூறியது: அண்ணாமலைப் பலகலைக்கழகச் சட்டம் 2013-ன் படி, வரும் கல்வியாண்டு முதல் பல்கலைக்கழகத்தின் தொழிற்படிப்புகளான பொறியியல், மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த படிப்புகளுக்கான அனுமதிச் சேர்க்கை (தமிழ்நாடு அட்மிஷன் இன் புரஃபஷனல் எஜிகேஷனல் இன்ஸ்ட்டியுஷன்ஸ் ஆக்ட் 2006-ன் படி) தமிழ்நாடு அரசு கவுன்சலிங் மூலம் நடைபெறும்.
இனிமேல் பல்கலைக்கழக அனுமதிச் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு கிடையாது. மேலும் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் இந்தக் கல்வியாண்டில் இதுவரை 70 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர் என்றார் அவர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.