Pages

Saturday, November 30, 2013

குரூப் 2 தேர்விற்கு கால்குலேட்டர், மொபைல் போன் போன்ற மின்னணு சாதனங்களுக்கு அனுமதியில்லை

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப்-2-ல் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் கால்குலேட்டர், மொபைல் போன், பேஜர் போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருவள்ளுர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1-ல்) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப் 2 நடைபெறவுள்ளது. இத்தேர்வில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள் பேஜர், மொபைல் போன், கால்குலேட்டர், நினைவகக் குறிப்பு புத்தகங்கள், உள்ளிட்ட மின்னணு சாதனங்கள்  ஆகியவற்றை தனி சாதனமாகவோ அல்லது கைக்கடிகாரம், மோதிரம் போன்றவற்றின் ஒரு பகுதியாகவோ எடுத்துவர அனுமதியில்லை.

மேற்படி பொருட்கள், உபகரணங்கள் விண்ணப்பதாரர்களிடம் இருந்தால், அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப் படமாட்டார்கள். மேலும் அவர்களது விடைத்தாட்கள் செல்லாததாக்கப்படும். அவர்கள் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள்.  விண்ணப்பதாரர்கள் தேவைக்கு ஏற்ப அவர்கள் முழுமையான உடற்பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 வரை இம்மாவட்டத்தில் மொத்தம் 6 மையங்களில் நடைபெறுகிறது.இதில் மொத்தம் 18 ஆயிரத்து 290 பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வில் பங்கேற்கும் அனைத்து நபர்களும் தங்களது அனுமதிச் சீட்டினை ஹால் டிக்கெட்டை நன்கு கவனித்து, அதில் குறிப்பிட்டுள்ள இடத்தில் தேர்வில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.