Pages

Tuesday, November 26, 2013

222 காலியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி., நடவடிக்கை

இளநிலை உதவியாளர், நில அளவர் உள்ளிட்ட குரூப் - 4 நிலையில், நிரப்பப்படாமல் உள்ள 222 பணியிடங்களை நிரப்ப 5ம் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு டிச., 6ம் தேதி, சென்னையில் நடக்கிறது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவிப்பு: குரூப் - 4 நிலையில், இன்னும், 222 பணியிடங்கள் நிரம்பாமல் உள்ளன. இதை நிரப்ப, ஐந்தாம் கட்ட கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் பதிவு எண்கள் விவரம், http://www.tnpsc.gov.in/ என்ற டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

சான்றிதழ் சரிபார்ப்பு, சென்னை, பாரிமுனையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் டிச., 6ம் தேதி காலை 8:30 மணி முதல் நடக்கும். விண்ணப்பதாரர்கள், தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் கையெழுத்திட்ட இரண்டு ஜெராக்ஸ் பிரதிகளையும் கொண்டு வர வேண்டும். தமிழ்வழியில் படித்தவர் என முன்னுரிமை கோரினால், அதற்குரிய சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும். இவ்வாறு, தேர்வாணையம் தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.