Pages

Friday, October 25, 2013

கல்விக் கடனுக்கு லஞ்சம் கேட்ட வங்கி மேலாளருக்கு சிறை

கல்விக்கடன் வழங்க வேண்டுமானால் தனக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என அடம்பிடித்த சென்ட்ரல் பாங்க்., மேலாளர் ஒருவர் சி.பி.ஐ., போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான விவரம் வருமாறு: தேனி மாவட்டம் அம்மச்சியாபுரத்தை சேர்ந்தவர் பாலுச்சாமி. இவரது மகள் நர்சிங் படிப்பதற்கென வங்கியில் லோன் கேட்டு விண்ணப்பித்தார். இந்த விண்ணப்பத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தினார் மேலாளர் முத்துக்குமார்.

இதற்கிடையில் கடன் கிடைக்க வேண்டுமானால் ரூ.15 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்றார். பேரம் பேசி ரூ.7 ஆயிரம் ஆனது. இதற்கு சம்மதித்த பாலுச்சாமி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். இந்த புகாரை சி.பி.ஐ.,க்கு பரிந்துரை செய்தனர்.

இதனையடுத்து பாலுச்சாமி பணத்தை ரத்னாநகரில் உள்ள மேலாளர் வீட்டு அருகே கொண்டு கொடுக்க சென்றபோது, மறைந்திருந்த சி.பி.ஐ.,போலீசார் கையும் களவுமாக பாங்க் மேலாளர் முத்துக்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் முத்துக்குமார் அடைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.