Pages

Saturday, October 5, 2013

"உறங்க விடாமல் செய்வதுதான் கனவு": அப்துல்கலாம்

"உறக்கத்தில் வருவது அல்ல கனவு, உறங்கவிடாமல் செய்வது தான் கனவு," என்று, தனியார் கல்லூரி விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.

நாமக்கல் பி.ஜி.பி., கல்லூரி சார்பில், "கலாமுடன் ஒரு நாள்" என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியதாவது:

"ஒவ்வொரு இளைஞருக்கும் ஒரு லட்சியம் இருக்க வேண்டும். அந்த லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். அறிவை பெற தேடுதல் வேண்டும். அவ்வாறு இருந்தால் வெற்றியை அடையலாம். தோல்வியை தோல்வி அடையச் செய்ய வேண்டும்.

உறக்கத்தில் வருவது அல்ல கனவு, உறங்கவிடாமல் செய்வது தான் கனவு. அந்த கனவை காணுங்கள். சிறு லட்சியம், அது ஒரு குற்றமாகும். நம்பிக்கையின்மையில் இருந்து மீள, லட்சிய விதைகளை விதைக்க வேண்டும். வரும் 2020ல் வளர்ந்த தமிழகம், வலிமைமிக்க இந்தியாவை உருவாக்க வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் மூன்று பேர் முக்கியமானவர்கள், அவர்களில், தாய், தந்தை, ஆரம்பப் பள்ளி ஆசிரியர். சிறந்த மருத்துவர், விஞ்ஞானி, இன்ஜினியர், ஆசிரியர், விவசாயி, அரசியல்வாதி ஆகியோர் வரிசையில் வந்தவர்கள் தான், தாமஸ் ஆல்வா எடிசன், கிரகாம் பெல், சர்.சி.வி.ராமன், ஸ்ரீனிவாச ராமானுஜம் உள்ளிட்டோர்.

அவர்களின் சாதனைகள் தான், உலகத்தில் இன்றும் பேசப்படுகிறது. நான் ஜனாதிபதியாக பணியாற்றிய காலத்தில், ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாணவர்களை சந்திப்பது உண்டு. அந்த வகையில், வடகிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பழங்குடியின மாணவர்களை சந்தித்தேன்.

அதில், ஸ்ரீகாந்த் என்ற பார்வையற்ற எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவன் 92 சதவீத மதிப்பெண் பெற்று தன்னம்பிக்கையுடன் போராடி எம்.ஐ.டி., யில் இடம் கிடைத்து படித்தார். உயர்ந்த நோக்குடன் படித்து வெற்றியாளராக வர இறைவனை பிராத்திக்கிறேன்." இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.