காது கேளாத, வாய் பேச முடியாத பள்ளிக் குழந்தைகளை கால் பிடிக்கச் செய்து கொடுமைப்படுத்திய ஆசிரியை "சஸ்பெண்ட்" செய்யப்பட்டுள்ளார்.
அகோலா என்ற இடத்தில் மாநில அரசு சார்பில் காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகளுக்கான பள்ளி உள்ளது. அங்கு ஷீத்தல் என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர், அந்தப் பரிதாபக் குழந்தைகளை பலவிதமாக தொந்தரவு செய்து வந்துள்ளார்.
குழந்தைகளை அடிப்பது, கால் கடுக்க நிற்க வைப்பது, சாப்பாடு போடாமல் கொடுமைப்படுத்துவது என பல விதமான சித்ரவதைகளுக்கு ஆளாக்கியுள்ளார். அடிக்கடி தன் காலைப் பிடித்து விடுமாறு குழந்தைகளை அவர் நிர்பந்திப்பது வழக்கம்.
அந்த கொடுமைக்கார ஆசிரியையை வசமாக மாட்டி விட நினைத்த மாணவர் ஒருவர் அவரின் தொந்தரவுகளை ரகசியமாக மொபைல் போனில் படமாகப் பிடித்து கல்வித் துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். அதையடுத்து, நேற்று முன்தினம் ஆசிரியை ஷீத்தல் "சஸ்பெண்ட்" செய்யப்பட்டார்.
அவரின் கொடுமை காட்சிகள் அப்பகுதி "டிவி"யில் நேற்று வெளியானதை அடுத்து வெகுண்டெழுந்த பொதுமக்கள் பள்ளி முன் கூடி ஆசிரியையை "டிஸ்மிஸ்" செய்ய வேண்டும் என, போராட்டம் நடத்தினர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.