வேலூர் கொணவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 7-ம் வகுப்பு படித்து வருபவர் இம்ரான்பாட்சா (வயது 13). நேற்று காலை மாணவன் பள்ளிக்கு வந்தார். காலை இடைவேளைக்கு பிறகு அவர் தாமதமாக வந்தார். இதை பள்ளி ஆசிரியர் உலகநிதி கண்டித்தார்.
அப்போது மாணவனை பிரம்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் மாணவன் கண் அருகில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மாணவனை அவரது பெற்றோர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் சேண்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Student late a vandhaalum oru Aasiriyar ketka koodaadhuna, Ellaa teachers yum veettukku anuppittu maanavargal thaniyaa thaan padikkanum. Maanavargalin edhirkaalathin meedhu akkarai ullavargal idhai konjam sindhikka vendum...
ReplyDelete