2013ஆம் ஆண்டுக்கான ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. என்று தமிழ் வளர்ச்சி துறை அறிவித்துள்ளது.
""கணினி வழித் தமிழ் மொழி பரவிட வகை செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ என்ற பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விருது பெறுபவருக்கு விருதுத் தொகையாக ரூ.1.00 இலட்சமும் 1 சவரன் தங்கப்பதக்கமும் வழங்கப்படும். இந்த விருது சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு அன்று வழங்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது பெற விண்ணப்பம் அனுப்பவேண்டிய கடைசி நாள் : 31.12.2013 ஆகும்.
மேலும் விவரங்களுக்கு http://www.tamilvalarchithurai.org என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.