ஒருங்கிணைந்த பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்திலுள்ள, 10 யூனியன்களிலும், அனைவருக்கும் கல்வி இயக்க செயல்பாடுகள் குறித்து, மாநிலத்திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி தலைமை ஆய்வு கூட்டம் நடந்தது.
பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது முன்னிலை வகித்தார். ஆய்வு கூட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க செயல்பாடுகளான, பள்ளிகளில் செயல்வழி கற்றல் கல்வி முறை, படைப்பாற்றல் கல்வி முறை, ஆசிரியர்களுக்கான பயிற்சி முறைகள், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான உண்டு உறைவிட மையங்களின் செயல்பாடுகள், மாற்றுத்திறன் கொண்டோர்களுக்கான உண்டு உறைவிட மையங்களின் செயல்பாடுகள், பெண்களுக்கான சிறப்பு உண்டு உறைவிட மைய செயல்பாடுகள், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டிட பணிகள், சுற்றுசுவர் பணிகள், கழிப்பறை பணிகள் ஆகியவைகளின் முன்னேற்றம், ஆசிரியர்களுக்கான ஊதிய விவரங்கள் உள்ளீட்ட அனைத்து செயல்பாடுகள் பற்றி, விரிவாக மாநிலத்திட்ட இயக்குனர் ஆய்வு மேற்கொண்டு, அறிவுரை வழங்கினார்.
மாநில திட்ட இயக்குனர் ஆய்வின்போது, ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில், படிக்கும் திறன், அடைவுத்திறன் ஆகியவைகள் பற்றி கேட்டறிந்து, மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறைவாக உள்ள பள்ளிகளையும் அதற்கான காரணங்களையும் ஆய்வு செய்தார்.
அப்போது அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் மேம்பட, அனைத்து அலுவலர்களும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஒன்றியங்களில் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், பள்ளிகளை அடிக்கடி பார்வையிட்டு ஆசிரியர்களுக்கும், தலைமையாசிரியர்களுக்கும் தேவையான அறிவுரைகள் வழங்கவேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆய்வு கூட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சி.இ.ஓ., பரிமளா, சி.இ.ஓ., மகாலிங்கம், தொடக்கக்கல்வி அலுவலர் எலிசபெத் உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.