Pages

Monday, October 14, 2013

"தனிமையால் மனநலம் பாதிக்கும்"

தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில், மனநலத்துறை சார்பில் உலக மனநல தின விழா நேற்று நடந்தது.


விழாவுக்கு தலைமை வகித்து, டீன் மகாதேவன் பேசியதாவது: "ஒவ்வொருவரும் மனநலத்தை பேணி காக்க வேண்டியது அவசியம். இதை வலியுறுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மனநல தின விழா அனுசரிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

தனிமை, சுதந்திரம் இன்மையால் தான், முதுமை வயதில் உள்ளவர்களுக்கு மனநோய் வர வாய்ப்பு உண்டாகிறது. இதுகுறித்து உரிய அக்கறை எடுத்து, உரிய சிகிச்சைகளை கவனமாக மேற்கொள்ளவதன் மூலம், மனநோயை எளிதாக குணப்படுத்த முடியும்.

உலக அளவில், 45 கோடி மக்கள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என, புள்ளிவிபரம் கூறுகிறது. நாம் சந்திக்கும், நான்கு பேரில் ஒருவருக்கு, மன நல பாதிப்பு உள்ளது எனவும் தெரிய வந்துள்ளது. இதற்கு உரிய சிகிச்சை எடுப்பதன் மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும். இதற்குரிய சிறப்பு கவனத்தை ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ள வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து மனநலம் குறித்து குறும்படம் வெளியிடப்பட்டு, பார்வையாளர்களிடம் மனநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.