தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 2,900 பட்டதாரி ஆசிரியர்பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட இந்தத்தேர்வை ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.
இதில் ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழி பாடங்களில் படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில், சான்றிதழ் சரிபார்க்கப்பட்டும் தமிழ் வழியில் தேர்ச்சி பெற்ற ஆயிரத்து 200 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை என்று புகார் கூறப்படுகிறது.இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கரூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மனு கொடுத்தனர். இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணை இயக்குநர் அறிவொளியிடம் தொடர்பு கொண்டபோது, நமது கேள்விக்கு பதிலளிக்க மறுத்து தொடர்பை துண்டித்துவிட்டார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.