பேருந்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மாணவர்களை கண்டித்த தலைமை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை அடுத்து உள்ள நாகவேடு கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ரவிக்குமார் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இப்பள்ளிக் கூடத்தில் பயிலும் +1 மாணவர்களில் சிலர், தனியார் வாகனத்தில் பயணச்சீட்டு வாங்காமல் பயணம் செய்துள்ளனர். இது விசயமாக பேருந்து நடத்துனருக்கும், மாணவர்களுக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இது அறிந்த தலைமையாசிரியர், பேருந்தில் ஒழுங்கீனமாக நடந்த மாணவர்களை அழைத்து எச்சரித்ததோடு, அவர்களது பெற்றோரை அழைத்து வர சொல்லியிருக்கிறார். இந்நிலையில், நேற்று முன் தினம் திடீரென தலைமையாசிரியர் அறைக்குள் 3 பேர் நுழைந்து, ரவிக்குமாரை சரமாரியாக தாக்கி விட்டு, தப்பியோடி விட்டனர்.
இது குறித்த வழக்கை பதிவு செய்த அரக்கோணம் காவல்துறையினர், தாக்குதல் நடத்தியவர்கள், ரவிக்குமார் கண்டித்த மாணவர்களின் நண்பர்களா அல்லது உறவினர்களா என்கிற ரீதியில் விசாரணை மேற்கொண்டு, தப்பியோடிய 3 வாலிபர்களையும் தேடி வருகின்றனர்.
HM meethu thakkuthal nadathiyathu migavum kandikka thakkathu. Ethu paavamaana seyal. Aasiriyarai mathikkum maanavan thaan nalla manithanaaga varuvaan. HM sir feel pannaathinga.
ReplyDelete