Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, October 7, 2013

    இஷ்டப்பட்டு படித்தால் கஷ்டமின்றி சாதிக்கலாம்: ஆசிரியர்கள் "அட்வைஸ்"

    "மாணவப் பருவத்தில் இஷ்டப்பட்டு படித்தால், வாழ்க்கை முழுவதும் கஷ்டமில்லாமல் சாதிக்கலாம்" என, மதுரையில் "தினமலர்" நாளிதழ் சார்பில் நடந்த "ஜெயித்துக் காட்டுவோம்" நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பேசினர்.

    பசுமலை மன்னர் கல்லூரியில் பிளஸ் 2 மாணவர்களுக்காக "தினமலர்" சார்பில் நடந்த இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் பேசியதாவது:


    ஆர்.பழனிவேல்ராஜன், சி.இ.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி, மதுரை(ஆங்கிலம்): மாணவர்களுக்கு மொத்த மதிப்பெண் கூடுவதற்கு, மொழிப்பாட மதிப்பெண் உதவும். இதனால், மாநில ரேங்க்குகளை கூட சில மாணவர்கள் இழந்ததுள்ளனர்.


    ஆங்கிலத்தை திட்டமிட்டு படிப்பது அவசியம். 2006 முதல் 2013ம் ஆண்டுகள் வரை வினா வங்கிகளில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள், பெருவினாக்கள், 2ம் தாளில் இலக்கணம், "பாராகிராப்", கடிதம் வரைதல் போன்ற பகுதிகளை எழுதி பயிற்சி பெறலாம். முதல் 5 பாடங்களை தெளிவாக படித்துவிட்டால் மதிப்பெண்களை குவிக்க வாய்ப்பு ஏற்படும்.


    எஸ்.பாலாஜி, தாசில்தார், மதுரை (கணிதம்): "புளு பிரிண்ட்" அடிப்படையை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். முதல் நான்கு பாடங்களின் வினாக்களை தெளிவாக படித்தால், ஒரு மதிப்பெண் மற்றும் 6 மதிப்பெண் பகுதி கேள்விகளுக்கு சிரமமின்றி விடையளிக்கலாம்.


    சூத்திரங்கள் எழுதி "ஸ்டெப்" படி விடையளிக்க வேண்டும். "புக்பேக்", பி.டி.ஏ., புத்தக வினா வங்கி மற்றும் இதுவரை வெளிவந்த 24 வினா வங்கியின் வினாக்களில் நன்கு பயிற்சி எடுக்கவேண்டும். ஒரு பத்து மதிப்பெண் கணக்கு எழுத, குறைந்தது பத்து வினாக்களுக்கு பயிற்சி பெறவேண்டும். பலமுறை எழுதிப் பார்ப்பதால் முழு மதிப்பெண் பெறலாம்.


    டி.எஸ்.ஸ்ரீதர்பாபு, சவுராஷ்டிரா மேல்நிலை பள்ளி, மதுரை (இயற்பியல்): தேர்வுக்கு போதிய காலம் உள்ளதால், முந்தைய வினா வங்கி கேள்விகளை திட்டமிட்டு படிக்கலாம். 2006ம் ஆண்டு அரசு வெளியிட்டுள்ள "மாதிரி வினா வங்கி"கள் கேள்விகளுக்கு பதில் எழுத, தயாராக வேண்டும். பகுதி "பி" யில், பெறும் மதிப்பெண் மூலமே, மொத்த மதிப்பெண் அதிகரிக்கும். குறிப்பாக 2, 5, 6, 7 மற்றும் 8ம் பாடங்களை தெளிவாக படிக்க வேண்டும்.


    "புக்பேக்" வினாக்களை தெளிவாக படிப்பதால், ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிப்பது எளிது. நெடுவினாக்களில் படங்கள், விதிகள், குறியீடுகள் தெளிவாக குறிப்பிட வேண்டும். புத்தகங்களில் உள்ள பயிற்சி மற்றும் எடுத்துக்காட்டுக்களை நன்கு படிப்பது அவசியம். அடிக்கடி கேட்கப்படும் வினாக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.


    இ.சீனிவாசன், அரசு மேல்நிலை பள்ளி, கொடிமங்கலம்(வேதியியல்): குறியீடுகள், அட்டவனை, வேறுபாடுகள், நன்மை தீமைகள், கோட்பாடு தொடர்பான கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வாரந்தோறும் வீட்டில் இருந்தபடியே சுயமாக தேர்வு எழுதிப் பழக வேண்டும். "புக்பேக்" வினா, பி.டி.ஏ., வினா வங்கியை தெளிவாக படித்தால்,  ஒரு மதிப்பெண் பகுதியில் முழு மதிப்பெண்கள் பெறலாம்.


    "புளு பிரிண்ட்"டிற்கு ஏற்ப அதுதொடர்பான கேள்விகளை படித்து, பலமுறை எழுதிப் பார்ப்பது நல்லது. "புக்பேக்", வினா வங்கி மற்றும் பி.டி.ஏ., வினா வங்கி கேள்விகளை நன்கு படித்தால் அதிக மதிப்பெண் பெறுவது எளிது.


    எஸ்.ஏ.செந்தில்குமார், "சாஷ்" நிறுவன தனித்திறன் பயிற்சியாளர் (தன்னம்பிக்கை): மாணவர்கள் பாடத்தை இஷ்டப்பட்டு படிக்க வேண்டும். வாழ்க்கையில் எதுவும் முடியாதது இல்லை. உலகம் நம்மை வரவேற்க வேண்டும் என்றால், கல்வி முக்கியம். மாணவப் பருவத்தில், உங்களுக்கு என்று ஒரு லட்சியத்தை ஏற்படுத்திக்கொண்டு, அதை அடைய முயற்சியுங்கள். "நெகடிவ்" பேச்சு வேண்டாம். ஆங்கிலத்தை நாம் கஷ்டமாக நினைக்கிறோம்.


    உண்மையில், ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது நாம் தான் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றுள்ளோம். தயக்கம் நமக்கு தடையாக உள்ளது. நமக்கு தெரியாததை பற்றி கவலைப்பட வேண்டாம். இப்போதிருந்து வாழ்க்கையில் திட்டமிட தயாராக உறுதியேற்க வேண்டும். நம்முடைய ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும், தன்னம்பிக்கை ஒளிந்துள்ளது. உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். இந்த வயதில் நன்றாக உழைக்க கற்றுக்கொண்டால், வாழ்க்கை முழுவதும் வெற்றி கிட்டும், என்றார்.


    நிகழ்ச்சியை ராஜ்மஹால், மீனாட்சி பேன் ஹவுஸ், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி, சூலப்புரம் திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பூர்விகா மொபைல் வோர்ல்டு ஆகியன இணைந்து வழங்கின. 

    No comments: