Pages

Monday, October 14, 2013

உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாகும் இடம் இந்தியா..

William Wilson Photographyஇந்தியா   என்னும்   நாடு   வெளிநாட்டினருக்கு   ஒரு குப்பைத்  தொட்டியாகத்தான் இன்றளவும் தெரிகறது.   ஏனென்றால்   மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் சேர்த்துவைக்கப்படும் பிளாஸ்டிக் , இரும்புக் குப்பைகள் வந்து கொட்டுவது இந்தியாவில்தான். அதுப்போல உலக அளவில் தடை செய்யப்பட்ட மருந்துகள் விற்பனையாவதும் இந்தியாவில்தான்.


பலநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் மட்டும் விற்பனையில் இருக்கும் கூட்டு மருந்துகள்    எத்தனை    தெரியுமா?   80.

சரி, இப்போது பார்ப்போம். அது என்னென்ன மருந்துகள் என்று.

1 . அனால்ஜின் ( Analgin)   பயன்பாடு – வலி நிவாரணி
பக்க விளைவு – எலும்பு மஜ்ஜை சீர்கேடு
2 . நிமிசுலைட் (Nimisulide)  பயன்பாடு – வலி நிவாரணி மற்றும் காய்ச்சல்
பக்க விளைவு – கல்லீரல் செயல் இழப்பு
3 . பினைல் ப்ரோபநோலமைன் ( phenyl propanolamine    பயன்பாடு – சளி மற்றும் மூக்கு ஒழுகுதல்
பக்க விளைவு – மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் திடீர் அடைப்பால் சுயநினைவு இழத்தல்
4 . சிசாபிரைடு ( cisapride )  பயன்பாடு – மலச்சிக்கல் மற்றும் அதிக அமிலம் சுரத்தலை கட்டுப்படுத்து
பக்க விளைவு – இதயத் துடிப்பு சீர்கேடு
5 . குயிநோடக்ளர் (quinodochlor )  பயன்பாடு -வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்
பக்க விளைவு – கண்பார்வை பாதிப்பு
6 . பியுரசொளிடன் (Furazolidone )  பயன்பாடு – வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்
பக்க விளைவு – புற்றுநோய்
7 . நைட்ரோபியுரசொன் (Nitrofurozone )  பயன்பாடு – கிருமிகளை அழித்தல்
பக்க விளைவு – புற்றுநோய்
8 . ஆக்சிபென் பியுட்டசொன் ( Oxyphenbutozone )  பயன்பாடு – வலி நிவாரணி
பக்க விளைவு – எலும்பு மஜ்ஜை சீர்கேடு
9 . பைப்பரசின் ( Piperazine )  பயன்பாடு – வயிற்றுப் புழுக்களை அழித்தல்
பக்க விளைவு – நரம்புச் சிதைவு
10 . பினப்தலின் (Phenophthalein )   பயன்பாடு – மலமிலக்கி
பக்க விளைவு – புற்றுநோய்
சரி, இந்த பத்து மருந்துகளின் விற்பனைப் பெயர்கள் தெரியணும் இல்லையா

1 . அனால்ஜின் – Paralgan-M,Novalgin,
2 . நிமிசுலைட் -Monogesic,N lid,Nam,Nelsid,Nimbus,Nimulid,Nise,Nugesic,Sumo,Zydol
3 . பினைல் ப்ரோபநோலமைன் – D-cold,Coldact,
4 . சிசாபிரைடு -Alipride,Cisapro,Santiza,Unipride
5 . பியுரசொளிடன் – Furoxone
6 . பைப்பரசின் -Piperazine citrate
7 . குயிநோடக்ளர் – Entero quinol

இதைத்தான் நம் மருத்துவர்கள் தடை செய்யப்பட்டாலும் பரவாயில்லை என்று எழுது எழுதுன்னு எழுதுகிறார்கள். ஏன் நாமே வலுக்கட்டாயமாக மருத்துவரை பரிந்துரைக்கவும் செய்கிறோம். நமக்கு உடனே நோய் சரியாக வேண்டும், பக்க விளைவுகள் வந்தால் பின்னாடி பார்த்துக்கொள்ளாலாம் என்கிற நினைப்பு. இல்லாவிட்டால் குலசாமிக்கு விரதம் இருந்து மொட்டை போட்டு பொங்கல் வைச்சால் போதும் என்கிற நினைப்பு. இதற்கு முழுக்காரணமும் மருந்து நிறுவனங்களும் ,மருத்துவர்களுமேதான்.

மேலே இருக்கும் இந்த மருந்தானது மிகச் சிறந்த வலி நிவாரணியாக கருதப்பட்டு மருந்து விற்பனையில் சக்கைப்போடு போட்டது, நம்ம வியாபாரிகளை பற்றித்தான் உங்களுக்கு தெரியுமே? காதலை மையப்படுத்தி ஒரு சினிமா வெற்றி பெற்றால் போதும், உடனே வரிசையாக காதல் படமா எடுப்பார்கள் என்று அதேபோல் இந்த மருந்தை எல்லா நிறுவனங்களும் விற்பனை செய்தன பின்புதான் தெரிந்தது. இதன் பக்கவிளைவு இதைத் தொடர்ச்சியாக எடுத்துகொண்டால் இதயநோய் வரும் என்று வந்தது வினை, 2004 ம் ஆண்டு இந்த மருந்தை விற்பனை செய்ய கூடாது என்று தடை கூட வந்தது.

ஆனால் மருந்து நிறுவனங்கள் இந்த மருந்தை அதிகமாக உற்பத்தி செய்துவிற்பனைக்கு வைத்துள்ளன என்ன செய்வதென்று முழிபிதுங்கி,தடைசெய்த 2004 ம் ஆண்டில் சுகாதாரத் துறை அமைச்சராக   இருந்தவரின்  தந்தையிடம் 200 கோடி கொடுத்தன. ஒரு ஆறு மாதம் விற்பனை செயது சம்பாதித்தன மருந்து நிறுவனங்கள். மருந்தை உண்டவன் செத்தானாஇருக்கிறானா என்று தெரியவில்லை.

 …முத்தமிழன்… செய்தி பகிர்வு : இன்று ஒரு தகவல்

1 comment:

  1. Nam makkal anaithaiyum thaangum elichavaayarkal. Saakadaiyaikuda tonic endraal kudippaargal endra nambikkai avargalukku. Naam sinthikkaathavarai eppadithaan seivaargal.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.