Pages

Monday, October 14, 2013

இயலாக்குழந்தைகளுக்கு பால், பழம், பிஸ்கட் வழங்க "ஸ்பான்சர்" தேடும் அதிகாரிகள்

மதுரை மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் (எஸ்.எஸ்.ஏ.,) நிதிக்குறைப்பால் அரசு பகல் நேர பராமரிப்பு மையங்களில், இயலாக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட பால், பழம், பிஸ்கட்கள் ஆகிய ஊட்டச்சத்து உணவுகள் இந்தாண்டு நிறுத்தப்பட்டன.


மாவட்டத்தில் 15 கல்வி ஒன்றியங்களில் இம்மையங்கள் செயல்படுகின்றன. இங்கு 6 முதல் 18 வயது வரை 300 இயலாக்குழந்தைகள் பகல் நேரத்தில் தங்கி படிக்கின்றனர். இதற்கு, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படுகிறது.

இதில், மதிய உணவுடன் ஊட்டச்சத்துக்காக, குழந்தைகளுக்கு இருவேளை 150 மி., பால், ஹார்லிக்ஸ் அல்லது பூஸ்ட், பழங்கள், பிஸ்கட்கள் வழங்கப்பட்டன. மேலும், வீட்டில் இருந்து மையத்திற்கு குழந்தைகளை அழைத்துவர வாகன வாடகையாக, ஒரு மையத்திற்கு ரூ.4,300 வழங்கப்பட்டன.

மாநிலம் முழுவதும் இந்தாண்டு எஸ்.எஸ்.ஏ., திட்டத்திற்கு, மத்திய அரசு வழங்கும் நிதி குறைக்கப்பட்டது. இதனால், சிக்கன நடவடிக்கையாக இம்மையங்களுக்கும் வழங்கப்பட்டு வந்த பால், பழம், பிஸ்கட்டுகள் முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டன.

மேலும், இத்திட்டத்தில் வழங்கப்பட்ட சத்துணவு, சீருடைகளும் நிறுத்தப்பட்டு, மாநில அரசின் மதிய உணவும், சீருடையும் வழங்கப்படுகிறது. இதனால், இயலாக்குழந்தைகள் பரிதவிப்பில் உள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மைய பொறுப்பாளர்கள், முக்கிய பிரமுகர்கள், நிறுவனங்களில் இருந்து உதவி பெற்று, பால், பழங்கள், பிஸ்கட் வழங்குகின்றனர். நல்ல உள்ளம் படைத்தவர்கள் இக்குழந்தைகளுக்கு உதவி செய்ய முன் வரலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.