வெளிநாட்டில் சென்று படிப்பது ஒரு சாதாரண விஷயமாகிவிட்ட நிலையில், அதன்பிறகு, மீண்டும் இந்தியா வந்து, ஒரு நல்ல பணியில் அமர நினைப்பவர்கள் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
வெளிநாட்டில் படிக்கச் செல்லும் பல பேர், படிப்பு முடிந்ததும் இந்தியா திரும்ப நினைப்பதில்லை. படித்த நாடு அல்லது வேறு ஏதேனும் ஒரு நாட்டில் செட்டிலாக விரும்புகிறார்கள். பல ஆண்டுகள் கழித்துதான் இந்தியா திரும்ப எண்ணுகிறார்கள். ஆனால் சிலரோ, படித்து முடித்ததும், இந்தியா திரும்பி, தம் உற்றார், உறவினரின் அரவணைப்பில் இருந்துகொண்டு, ஒரு நல்ல பணியில் அமர நினைக்கிறார்கள்.
எனவே, அத்தகைய நபர்கள், படிக்கும்போதே, தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்வது அவசியம். அப்போதுதான், படித்த பின்னர், இந்தியாவிலேயே நல்ல வேலை வாய்ப்புகளைப் பெறுதவற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்க முடியும். அது தொடர்பான சில ஆலோசனைகள்,
* வெளிநாட்டில் படிக்கும்போதே, LinkedIn மற்றும் Brijj போன்ற ஆன்லைன் நெட்வொர்க்கில் இணைய வேண்டும். அப்போதுதான், உங்களின் Profile -ஐ வலுப்படுத்திக்கொண்டு, வேலை வாய்ப்பு சந்தையில் தொடர்ச்சியான தொடர்புகளை வைத்துக்கொள்ள முடியும்.
* Jim Campbell, International Careers Adviser, Careers Service, University of Glasgow போன்றவை, புரபஷனல் அமைப்புகளுடன் தொடர்புகளை தொடரும்படி மாணவர்களுக்கு ஆலோசனை கூறுகின்றன. மேலும், India - UK Alumni network (www.britishcouncil.org/india-common-uk-alumni-relations-network.htm) போன்றவைகளுடன், நெட்வொர்க்கில் இணைவதும் தேவையான ஒன்று.
* பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள், நாடு திரும்பியவுடன், இந்தியாவில் இருக்கும் அந்நாடுகள் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியலாம். ஏனெனில், அந்நாட்டு மொழி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றைப் பற்றி அங்கு படித்த மாணவர்கள் அறிந்திருப்பார்கள்.
* இந்தியாவில் இருக்கும் பிரான்ஸ் நாட்டு தூதரகம், France - India job opportunities என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியில், இந்தியாவிலிருக்கும் பெரிய பிரான்ஸ் நிறுவனங்களின் HR மேலாளர்கள், பிரான்ஸ் நிறுவனங்களுடன் ஒத்துழைப்பில் இருக்கும் இந்திய நிறுவனங்களின் HR மேலாளர்கள் மற்றும் புகழ்பெற்ற பிரான்ஸ் மற்றும் இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் இருக்கும், சர்வதேச உறவுகளுக்கான துறைகளின் தலைவர்கள் ஆகியோர் அழைக்கப்படுவர்.
* தற்போதைய நிலையில், சுமார் 450க்கும் மேற்பட்ட பிரான்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன. அவற்றின் மொத்த முதலீட்டு மதிப்பு(இந்திய ரூபாய் மதிப்பின்படி) 1800 கோடிகள்.
* அதேசமயம், நீங்கள் வெளிநாடுகளில் மேற்கொள்ளும் அனைத்து படிப்புகளும், இந்தியாவில் உடனடியான பணி வாய்ப்புகளை உங்களுக்குப் பெற்றுத்தந்து விடாது. சமீப காலங்களில், இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு எம்.பி.ஏ., பட்டதாரிகளுக்கு அதிக சம்பளம் கொடுப்பதை குறைத்துக்கொண்டு விட்டன.
* ஆனால், ஸ்பெஷலைஸ்டு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வெளிநாட்டுப் படிப்புகளுக்கு, இந்திய கார்பரேட் வேலைவாய்ப்பு சந்தையில் நல்ல மவுசு இருப்பதை மறுக்க முடியாது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புகள்
அதேசமயம், இந்தியா வர விரும்பாமல், வெளிநாடுகளில் வேலைசெய்ய விரும்புவோருக்கான சில ஆலோசனைகள்,
* மேற்கத்திய நாடுகள் மட்டுமே சிறப்பான பணி வாய்ப்புகளைத் தரும் என்று நினைப்பது தவறு. கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து அந்நாடுகள் மீண்டு வந்துகொண்டிருக்கும் சூழலில், உலகளவில் நல்ல வேலை வாய்ப்புகளைத் தரும் வேறுபல நாடுகள் பற்றியும் யோசிக்க வேண்டும்.
* பிரிட்டனில் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு, மத்திய கிழக்கு நாடுகள், மத்திய ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்காவின் சில பகுதிகள் ஆகியவற்றில், நல்ல பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஏனெனில், அப்பகுதிகளில், பிரிட்டன் பட்டப் படிப்பிற்கு நல்ல மரியாதை உண்டு.
* சமீப காலங்களில், பிரிட்டனில் இருக்கும் வேலைவாய்ப்பு சேவை மையங்கள், அங்கே படிக்கும் மாணவர்களுக்கு, உலகளவில் பணி வாய்ப்புகள் கிடைக்கும் இடங்கள் பற்றிய ஆலோசனைகளை வழங்குகின்றன.
* எனவே, இந்திய மாணவர்கள், படிப்பதற்காக ஒரு வெளிநாட்டை தேர்வுசெய்யும் முன்பாக, அங்கே, உலகளாவிய பணிவாய்ப்புகள் குறித்து ஆலோசனையும், வழிகாட்டுதல்களும் வழங்கும் சேவை அமைப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் எத்தனை உள்ளன என்பது குறித்து தெளிவாக தெரிந்து முடிவெடுப்பது நன்று.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.