காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நீடித்து வந்த மேல் அடுக்குச் சுழற்சி தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியிருப்பதால், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக சென்னையில், திருவொற்றியூர், பாரிமுனை, மெரினா, அடையார், பூந்தமல்லி, கிண்டி உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை தொடங்கிய மழை இரவு முழுவதும் நீடித்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதோடு, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
மேலும் சில தினங்களுக்கு மழை தொடர வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளதால், முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளில் மாநகராட்சி இறங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.