Pages

Saturday, October 12, 2013

அரசுப் பள்ளிக்கு பூட்டு போட்ட தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

அரசுப் பள்ளிக்கு பூட்டு போட்ட தலைமை ஆசிரியர் தயாநிதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பெரியகுளம் அருகே அ.மீனாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தயாநிதி. இவர் பெரியகுளம் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தயாநிதிக்கு பதிலாக சுமதி என்பவர் அ.மீனாட்சிபுரம் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
இந்த மாற்றத்தை விரும்பாத தயாநிதி, நேற்று முன்தினம் பள்ளியை பூட்டி விட்டு சுமதியிடம் சாவியை கொடுக்காமல் சென்று விட்டார்.

இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் உள்ளே செல்ல முடியவில்லை. மாணவர்கள், பெற்றோர் ரோடு மறியல் செய்தனர். ஆர்.டி.ஓ., ராஜேந்திரன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மேரிஹெலன்ஜெஸிந்தா ஆகியோர் போலீசார் உதவியுடன் பூட்டை உடைத்து பள்ளியை திறந்தனர். அதன் பின் சுமதி தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றார்.

இச்சம்பவம், தொடர்பாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மேரிஹெலன் ஜெஸிந்தா விசாரணை நடத்தினார். பின்னர் தலைமை ஆசிரியர் தயாநிதியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.