Pages

Friday, October 4, 2013

டிசம்பரில் காலவரையற்ற வேலைநிறுத்தம், மத்திய அரசு ஊழியர் சம்ளேனம் அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் அமைப்பு மற்றும் வேலை நிறுத்த தயாரிப்பு மாநாடு சனிக்கிழமையன்று (அக்.5) சென்னையில் நடைபெறுகிறது. மத்திய, மாநில பொதுத் துறை நிறுவனங்கள், மாநில அரசு ஊழியர்களுக்கு 5 வருடங்களுக்கும் ஒரு முறை ஊதிய மாற்றம் செய்யப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய மாற்றம் செய்யப்படுகிறது.

1.1.2011 முதல் 7வது ஊதி யக் குழு அமைக்க வேண் டும் என வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் கடந்த 3 ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தி வரு கின்றனர். இதன் விளைவாக மத்திய அரசு 7வது ஊதியக் குழு அமைத்துள்ளது.

மேலும், அக்குழுவின் முடிவுகள் 2016 ஜனவரி மாதம் முதல் அம லாக்கப்படும் என்று அறி வித்துள்ளது.

7வது ஊதியக்குழு பரிந் துரைகளை 1.1.2011 தேதியி லிருந்து அமல்படுத்த வேண் டும். 50 விழுக்காடு பஞ்சப்ப டியை அடிப்படை ஊதியத் துடன் இணைத்து, ஓய்வூதி யம் உள்ளிட்ட அனைத்து நிதிப் பயன்களையும் வழங்க வேண்டும் என்று கோரி க்கை திசை திருப்பும் வகை யில் அரசின் அறிவிப்பு உள் ளது.

எனவே, மேற்கண்ட கோரிக்கைகளோடு 3 லட் சம் கிராம அஞ்சல் துறை ஊழியர்களை பணி நிரந்த ரம் செய்து, அவர்களை 7வது ஊதியக்குழு வரம்புக் குள் கொண்டு வர வேண் டும், மத்திய அரசுத்துறைக ளில் காலியாக உள்ள 6 லட் சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,ஓராண்டு காலியாக இருந் தால் அந்த பணியிடங் களை நிரப்பத் தேவை யில்லை என்ற அரசின் முடிவை திரும்ப பெற வேண் டும், பணியில் சேர்ந்தவர்க ளுக்கு ஓய்வு பெறுவதற்குள் குறைந்தது 5 பதவி உயர்வு வழங்க வேண்டும்.புதிய ஓய்வூதிய திட் டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியு றுத்தி டிசம்பர் மாதத்தில் காலவரையரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடை பெற உள்ளது

இதனையொட்டி மத் திய அரசு ஊழியர் மகா சம் மேளனம் சார்பில் அக்.5 அன்று சென்னை தி.நகரில் உள்ள ஜெர்மன் ஹாலில் வேலை நிறுத்த தயாரிப்பு மாநாடு நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.