Pages

Friday, October 25, 2013

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்க பரிசீலனை

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 34 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாமல் அவதிபட்டு வரும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு அளிக்க பள்ளிக்கல்வித் துறை பரிசீலனை செய்து வருகிறது.


தமிழகத்தில் உள்ள 2,595 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 1,605 பள்ளிகளில் மட்டும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், தொழிற்கல்விப் பிரிவு இயங்கி வருகிறது. இவற்றில், 4,000 தொழிற்கல்வி ஆசிரியர் பணிபுரிந்து வருகின்றனர். பட்டதாரி, முதுகலை ஆசிரியர்களைப் போல், தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு அளிக்கப்படுவதில்லை. 34 ஆண்டுகளாக, ஆசிரியர்களாகவே பணியாற்றி, எவ்வித பதவி உயர்வும் இல்லாமல், ஓய்வு பெறுகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக பொதுச் செயலர், ஜனார்த்தனன் மற்றும் நிர்வாகிகள், பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனரை (தொழிற்கல்வி) சந்தித்து பேசினர்.

இதுகுறித்து, ஜனார்த்தனன் கூறுகையில், "எங்களுக்கு, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வை வழங்க வேண்டும் என, இயக்குனரிடம் வலியுறுத்தினோம். நியாயமான இந்த கோரிக்கையை பரிசீலனை செய்து, நடவடிக்கை எடுப்பதாக, இயக்குனர் உறுதி அளித்தார்" என்றார்.

1 comment:

  1. அன்பார்ந்த தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு வணக்கம் தங்களின் கோரிக்கை ஏற்புடையது. ஆனால் தங்களின் கல்வி தகுதி பட்டயச்சான்றிதழ் அதாவது சுருங்கச்சொன்னால் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி, பாடம் நட்த்துவது 12 ஆம் வகுப்பு அதற்காக தங்களை முதுகலை ஆசிரியராக ஏற்றுக்கொள்ளமுடியாது. தாங்கள் பெறும் ஊதியத்தை வைத்து பட்டதாரி ஆசிரியர்களாகவும் ஏற்றுக்கொள்ளமுடியாது. மற்றொரு கருத்து தாங்கள் கல்வி தகுதியில் மாணவர்களின் மனதை புரிந்து நடத்தும் உளவியல் அறியாதவர்கள். சில காலங்களில் அரங்சாங்கம் எடுக்கும் சிறு விஷயங்கள் பிற்காலத்தில் பெரிய தவறுகளாக மாறிவிடும் அது போலவே தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமனமும் எனவே இனி வரும் காலங்களில் தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமனத்தில் அரசு சரியான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். தங்களை பொருத்த வரை பட்டதாரி ஆசிரியராகவும் ஏற்றுக்கொள்ள முடியாது. முதுகலை ஆசிரியராகவும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.