இணைய இணைப்புக்காக எல்இடி பல்புகளைப் பயன்ப டுத்தி சமிக்ஞைகளைக் கடத்தும் லை-ஃபை என்ற புதிய தொழில்நுட்பத்தை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வை-ஃபை தொழில்நுட்பத்துக்கு மாற்றாகக் கருதப்படும். இத்தொழில்நுட்பம், வை-ஃபை கருவியை விட விலை மலிவான கடத்தியைக் கொண்டது.ஷாங்காய் பியூடன் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப த்துறை பேராசிரியர் சி நான் தலைமையில், ஷாங்காய் தொழில் நுட்ப இயற்பியல் துறை விஞ்ஞானி கள் இணைந்து இத்தொழில் நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர்.
இது தொடர்பாக சி நான் கூறியதாவது: இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம், ஒரு வாட் திறன் கொண்ட எல்இடி பல்பைகடத்தியாகப் பயன்படுத்தி நான்கு கணிப்பொறிகளுக்கு இணைய இணைப்பு கொடுக்க முடியும். தற்போது ரேடியோ அலைகளைப்பயன்படுத்தி வை-ஃபை மூலம் இணைப்பு கொடுக்கப்படுகிறது.மைக்ரோசிப்புகள் பொதிய ப்பட்ட எல்இடி பல்பு கடத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நொடிக்கு 150 மெகாபைட் அளவுள்ள தரவுகளைப் பரிமாற முடியும்.இது சீனாவில் தற்போது பயன்பாட்டில் உள்ள அகன்ற அலைவரிசை (பிராட்பேண்ட்) இணைப்பை விட வேகமானது. எங்கெல்லாம் எல்இடி பல்பு உள்ளதோ அங்கு இணைய இணைப்பு கிடைக்கும். பல்புகளை அணைத்து விட்டால், இணைய இணைப்புதுண்டிக்கப்பட்டு விடும் என்றார். பிரிட்டன் எடின்பர்க் பல்கலைக்கழக பேராசிரியர் ஹரால்டு ஹாஸ், லை-ஃபை எனஇத்தொழில்நுட்பத்துக்குப் பெயரிட்டுள்ளார்.ஷாங்காயில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ள சீன சர்வதேச தொழிற் கண்காட்சியில் இத்தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படும் 10 கடத்தி கள் பார்வைக்காக வைக்கப்படவு ள்ளன. இக்கருவியின் எரிபொருள் நுகர்வுத் திறன் வெறும் 5 சதவீதம் எனக் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.