சென்னை ஐகோர்ட்டில், திருச்சி மாவட்டத்தில் உள்ள நேரு மெமோரியல் கல் லூரியின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘எங்கள் கல்லூரியில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கு முன்பு கல்லூரி கல்வி இயக்குனரகத்திடம் முன் அனுமதி பெறவேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:–
கல்லூரிகளில் அரசு அனுமதித்துள்ள பணியிடங்களில், காலியிடம் ஏற்படும் போது, அதை நிரப்புவதற்கு கல்லூரி கல்வி இயக்குனரிடம் முன் அனுமதி பெற வண்டும் என்று தனியார் கல்லூரிகள் ஒழுங்குமுறை சட்டத்திலும், விதிகளிலும் கூறப்பட வில்லை.
மேலும், ஒருவருக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படும், இந்த பணி நியமனம் என்பது கல்லூரி கல்வி இயக்குனரின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்றுதான் குறிப்பிடப்படுகிறது. எனவே அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்ப அரசிடம் முன் அனுமதி பெற தேவை இல்லை. இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளார்கள்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.