Pages

Wednesday, October 23, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு குளறுபடி - ஐகோர்ட் உத்தரவு

ஆசிரியர் தகுதித்தேர்வு, "கீ" பதில்களில் 9 கேள்விகளுக்கு தவறான விடைகள் அளிக்கப்பட்டுள்ளதால், அவற்றிற்கு முழு மதிப்பெண் வழங்க கோரிய வழக்கில், அரசுத்தரப்பில் பதில் மனு செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

விக்கிரமசிங்கபுரம் சூர்யா தாக்கல் செய்த மனு: எம்.எஸ்சி., பி.எட்., படித்துள்ளேன். ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம், 2012 அக்.,14 ல், பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்தது. குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பிக்கும் கலை, தமிழ், ஆங்கிலம், கணிதம் என, 4 பகுதிகளை கொண்ட வினாத்தாள் தயாரிக்கப்பட்டிருந்தது. எனக்கு "பி" வரிசை வினாத்தாள் வினியோகித்தனர். பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு, பல கேள்விகள் இடம் பெற்றிருந்தன.

டி.ஆர்.பி., இணையதளத்தில் "கீ" பதில்கள் வெளியானது. இதில், 9 கேள்விகளுக்கு தவறாக விடைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றிற்கு, நான் சரியான விடைகளை எழுதியுள்ளேன். எனக்கு, 86 மதிப்பெண் வழங்கியுள்ளனர். தேர்ச்சி பெற, 90 மதிப்பெண் வேண்டும். "கீ" பதில்கள் தவறாக உள்ளதால், எனக்கு கூடுதலாக 9 மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். இதனால், எனது மதிப்பெண் 95 ஆக உயரும், என குறிப்பிட்டார்.

நீதிபதி எஸ்.நாகமுத்து முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் பன்னீர்செல்வம் ஆஜரானார். தேர்வு வாரிய தலைவர் பதில் மனு செய்ய, நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.