Pages

Tuesday, October 15, 2013

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான அனைத்து சங்கங்களை திரட்டி மாநில அளவில் போராட்டம் ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி ஒத்த கருத்துடைய அனைத்து சங்கங்களையும் திரட்டி மாநில அளவிலான பேராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஆராம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் பாலசந்தர் தெரிவித்தார். 

காரைக்குடியில் தமிழ்நாடு ஆராம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கல்லல் வட்டாரம் சார்பில் முப்பெரும்விழா நடந்தது. வட்டார செயலாளர் சேவியர் சத்தியநாதன் வரவேற்றார். வட்டார தலைவர் பீட்டர் தலைமை வகித்தார். மாநில தலைவர் கண்ணன், பொதுச்செயலாளர் பாலசந்தர், மாவட்ட தலைவர் முத்துப்பாண்டியன், செயலாளர் தாமஸ்அமலநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
விழாவிற்கு பின் மாநில பொதுச்செயலாளர் பாலசந்தர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் உள்ளனர். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வழியுறுத்தி கடந்த 1988ல் போராட்டம் நடத்தப்பட்டது. இதன் எதிரொலியாக 4வது, 5 வது ஊதியக்குழுவில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால் 2006ல் அமல்படுத்தப்பட்ட 7வது ஊதியக்குழுவில் தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க மறுக்கப்பட்டுள்ளது. ஊதியக்குழுவில் உள்ள நபர்கள், தமிழகத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் மத்திய அரசுக்கு இணையான சம்பளம் பெற தகுதி இல்லை என தவறான அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளனர். மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்கள் பெற்றுள்ள அதே தகுதியைத்தான் தமிழக இடைநிலை ஆசிரியர்களும் பெற்றுள்ளனர். தமிழக முதல்வரின் தேர்தல் அறிக்கையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு உள்ள ஊதிய வேறுபாட்டை களையப்படும் என தெரிவித்து இருந்தார். ஆனால் இதுவரை தேர்தல் அறிக்கை நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் தெரிவித்ததை இதுவரை பேசக்கூடவில்லை. இதனை நடைமுறைப்படுத்தகோரி பலதரப்பட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. 
இதன் அடுத்தகட்ட முயற்சியாக தற்போது ஒத்த கருத்துடைய அனைத்து சங்கங்களையும இணைத்து மாநில அளவிலான போராட்டம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதவிர பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தில் ஒரு சில நோய்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தி கட்டணமில்லா சிகிச்சை தர வேண்டும். பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் தலைமை ஆசிரியர்களே கழிப்பறகைளை சுத்தம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.