Pages

Friday, October 25, 2013

ஆவணங்களை பாதுகாக்க நடவடிக்கை: உயர்கல்வி அமைச்சர் தகவல்

"தமிழ்நாடு அரசு ஆவண காப்பகங்களில், ஆவணங்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது" என உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.


சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது சமத்துவ மக்கள் கட்சி எம்.எல்.ஏ., சரத்குமார், "தமிழ்நாட்டில், ஆவணக் காப்பகங்களில், நவீன தொழில் நுட்பம் மூலம் ஆவணங்களை பாதுகாக்கும் செயல்குறிப்பு அரசிடம் உள்ளதா?" எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு, உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் பதில் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் உள்ள ஆவணங்களை பாதுகாப்பதற்காக, அவற்றை ஸ்கேனிங் மற்றும் நுண் படங்களாக்கும் பணி படிப்படியாக செயல்படுத்தப்படுகிறது. ஏனைய ஆவணங்களையும், கம்ப்யூட்டர் மயமாக்குதல் மற்றும் நுண் புகைப்படம் எடுத்தல் பணி மேற்கொள்ள, 2012 -13ல், பகுதி இரண்டு திட்டம் மூலம் 12 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில், அரசு ஆவண காப்பகம் உள்ளது. அதேபோல், திருச்சி, கடலூர், சேலம் உட்பட ஐந்து மாவட்டத் தலைநகரில் ஆவண காப்பகம் உள்ளது. இங்குள்ள ஆவணங்களை பாதுகாக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதற்காக கடந்த ஆண்டு 40 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அமைச்சர் பேசினார்.

அதைத் தொடர்ந்து, சரத்குமார் பேசும்போது, "ஆவணங்களை உரிய முறையில் பாதுகாத்து, வருங்கால சந்ததியினருக்கு வழங்க வேண்டியது அவசியம். ஆவணங்களை பாதுகாக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு நன்றி. திருநெல்வேலியில் ஆவண காப்பகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். கோரிக்கையை பரிசீலிப்பதாக, அமைச்சர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.