மாணவர்களின் சிந்திக்கும்திறன் வலுப்பெறவும், படைப்பாற்றல் வளரவும், தமிழகத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியை தடை செய்து, தமிழ்வழிக் கல்வியை உருவாக்க வேண்டும்" என, மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின், மாநில பொதுக்குழுக் கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது.
மாநிலத் தலைவர் மணி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் முத்துசாமி, பொருளாளர் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் ஊதியத்துக்கு இணையான ஊதியம்வழங்கி ஆணையிட வேண்டும். அரசு, இக்குறைபாட்டை நீக்காத பட்சத்தில், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பாதிப்பை நீக்கிட தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான அனைத்து சங்கங்களையும் ஒன்றிணைத்து போராடுவது என முடிவு செய்யப்பட்டது.கடந்த, 2003 ஏப்ரல் 1ம் தேதிக்கு பின் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நீக்கி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவேண்டும். அதுவரை, சி.பி.எஸ்., கணக்கில் கட்டியுள்ள தொகையில், கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, தாய்மொழி வழிக்கல்விதான் கற்பிக்கப்பட வேண்டும். அப்போதுதான், மாணவர்களின் சிந்திக்கும் திறன் வலுப்பெறும்; படைப்பாற்றல் வளரும். அவற்றை கருத்தில் கொண்டு, சுயநிதிப் பள்ளிகள் உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும், ஆங்கிலவழிக்கல்வியை தடை செய்து, தமிழ்வழிக் கல்வியை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.சமச்சீர் கல்வி அமலில் உள்ள தமிழகத்தில் அரசு பள்ளிகளில், ஏ.பி.எல்., அட்டைவழிக் கல்வியும், பாடப்புத்தக வழிக்கல்வியும் இரண்டும் நடத்தப்படுகிறது. சுயநிதிப் பள்ளிகளில், ஏ.பி.எல்., அட்டைவழிக் கல்வி இல்லை. புத்தக வழிக்கல்வி மட்டும்தான் உள்ளது.அரசு பள்ளிகளில் இரட்டைச் சுமை உள்ளதால், பெற்றோர்கள், சுயநிதி பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்புகின்றனர். அதனால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது. எனவே, அரசு பள்ளி, சுயநிதிப் பள்ளிகளில் இரண்டிலும், ஒரே கல்வி முறையை அமல்படுத்த வேண்டும்.பள்ளி நடைபெறாத சனிக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களிலும், அனைவருக்கும் கல்வி இயக்கத்தால் நடத்தப்படும் சி.ஆர்.சி., பி.ஆர்.சி., அளவிலான பயிற்சிகளில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு, ஈடு செய்ய விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அனைத்து நடுநிலைப்பள்ளிகளுக்கும், தமிழ் கற்பிக்க, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தி, தமிழாசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
correct the word thmizhaga or tamilnadu. please verify in headlins
ReplyDelete