Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, October 3, 2013

    ஏபிஎல் அட்டை பயிற்சியை குறை கூறுவோர் பணியாற்றும் பள்ளிகளில் ஆய்வு நடத்த முடிவு

    ஏபிஎல் அட்டை பயிற்சியை குறை கூறுபவர்களின் பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்த அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் அண்ணாதுரை, மாவட்ட செயலாளர் நடேசன், மாவட்ட பொருளாளர் சேகர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:
    தமிழ் நாட்டில் எங்கும் இல்லாத அளவிற்கு நாமக்கல் மாவட்டத்தில் அனை வருக்கும் கல்வி இயக்கம் மூலம் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, எளிமையாக்கப்பட்ட செயல் வழிகற்றல் பயிற்சி நடத்தப்படுகிறது. இது முதல் பருவத் தேர்வை சீர் குலைக்கும் வகையில் அமைந்துள்ளது. 
    இரண்டு ஆசிரியர் பணியாற்றும் பள்ளியில் ஒரு ஆசிரியரை பயிற்சிக்கு அழைப்பதன் மூலம் ஒரு ஆசிரியரே 5 வகுப்புகளுக்கும் தேர்வு நடத்த வேண்டிய நிலை உள்ளது. பொது விடுமுறை நாட்களிலும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.இது குறித்து அனைவருக்கும் கல்வி இயக்க நாமக்கல் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் கூறுகையில், ‘‘தேர்வு பணி பாதிக்கும் வகையில் எந்த ஆசிரியரையும் பயிற்சிக்கு அழைக்கவில்லை. ஒரு ஒன்றியத்தில் 2 ஆசிரியர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.  பல பள்ளிகளில் ஏபிஎல் அட்டைகளை ஆசிரியர்கள் மறந்து விட்டனர். தற்போது அது எளிமையாக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான பயிற்சி, ஆசிரியர் பயிற்றுனர் மற்றும் சிறந்த ஆசிரியர்களை கொண்டு அளிக்கப்படுகிறது. 
    இந்த பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், அவர்கள் பணியாற்றும் பள்ளிகளில் ஏபிஎல் அட்டையை பயன்படுத்தி எப்படி குழந்தைகளுக்கு பாடம் நடத்தியுள்ளனர் என காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்த பிறகு ஆய்வு செய்யப்படும்,’’ என்றார்

    No comments: