"நாம் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால், தாய் மொழியில் மட்டுமே சிந்திக்க வேண்டும்" என கல்லூரி விழாவில், பேராசிரியர் ஞானசம்பந்தன் பேசினார்.
சூலூர் ஆர்.வி.எஸ்., கல்வி அறக்கட்டளை சார்பில், கண்ணம்பாளையத்தில் முத்தமிழ் விழா நடந்தது. ஆர்.வி.எஸ்., அறக்கட்டளை அறங்காவலர் ஸ்ரீவித்யாலட்சுமி குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார். ஆசிரியர் வெள்ளிங்கிரி வரவேற்றார். மேலாண்மை அறங்காவலர் செந்தில் கணேஷ் தலைமை வகித்தார்.
"இலக்கியமும் நகைச்சுவையும்" என்ற தலைப்பில், பேராசிரியர் ஞானசம்பந்தன் பேசியதாவது: மாணவர்கள் அனைத்து துறையிலும் ஈடுபாடு உள்ளவர்களாக இருக்க வேண்டும். உயிர் எழுத்தும், மெய் எழுத்தும் கலந்து உருவான சொற்கள்தான் அம்மா, அப்பா. அவர்களை "மம்மி, டாடி" என அழைப்பது எந்த வகையில் நியாயம்? அப்படி அழைப்தை தவிர்க்க வேண்டும். நாம் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் படிக்கலாம், பேசலாம், அது குறித்து அறிந்து கொள்ளலாம். ஆனால், தாய்மொழியில் மட்டுமே சிந்திக்க வேண்டும்; செயல்படவேண்டும். அப்போதுதான் கலாச்சாரம் பாதிக்கப்படாது.
பாரதிக்கு 18 மொழிகள் தெரியும். ஆனால், அவர் தமிழில், உணர்வுகளை தட்டி எழுப்பி, எழுதிய பாடல்களை எப்போதும் மறக்க முடியாது.இவ்வாறு, அவர் பேசினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.