Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, October 10, 2013

    தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் துவக்கம்

    அரசு மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில்,ஏராளமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.10ம் வகுப்பு, பிளஸ் 2வில் முக்கியப்பாடங்களுக்கு,ஆசிரியர்கள் இல்லாததால், மாணவ, மாணவியரின்தேர்ச்சி சதவீதம் குறைகிறது. இதை தவிர்க்கும் பொருட்டு, தொகுப்பூதிய அடிப்படையில், 6,545 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என,
    முதல்வர் ஜெ.,அறிவித்தார்.அதன்படி, மாவட்ட வாரியாக மேல்நிலை,உயர்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள ஆசிரியர்பணியிடங்கள் குறித்த எண்ணிக்கை விவரம்,பள்ளிகல்வித்துறைக்கு அனுப்பப்பட்டது.அவற்றை உடனடியாக நிரப்ப ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி,ஆசிரியர் காலிப்பணியிட விவரம் குறித்தபட்டியல், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது.தொகுப்பூதியத்தில் பணிபுரிய விரும்புவோர், பட்டியலை பார்த்து, தகுந்த சான்றிதழ்களுடன்,சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியரிடம் நேரில் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுடையோரை,உடனடியாக அப்பணியில்நியமிக்க,தலைமையாசிரியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, மாவட்டவாரியாக,முதன்மைக்கல்வி அதிகாரிகளின் மேற்பார்வையில்,தொகுதிப்பூதியத்தில் ஆசிரியர்களை நியமிக்கும் பணி துவங்கி உள்ளது.முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம் 5,000,பட்டதாரி ஆசிரியர்களுக்கு 4,000 ரூபாய் சம்பளமாகவழங்கப்படும். இதற்காக, 20.18 கோடி ரூபாய்,பெற்றோர் ஆசிரியர் கழகத்தில்இருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், "ரெகுலர்' ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும் வரை , இவர்கள் பணியில் இருப்பவர் என,  அறிவிக்கப்பட்டுள்ளது.

    NO OF VACANCIES TO BE FIILED IN DHARMAPURI DISTRICT

    PG ASSISTANT

    ENGLISH.          17
    MATHS.          09
    PHYSICS.          09
    CHEMISTRY.    13
    ZOOLOGY.        02
    ECONOMICS.    26
    COMMERCE.    13

    BT ASSISTANTS

    ENGLISH.          90
    MATHS.          12
    SCINCE.            58

    No comments: