ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனசாக வழங்க மத்திய மந்திரி சபை அனுமதி வழங்கி உள்ளது. ரெயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தி தொடர்பான போனஸ் ஒவ்வொரு ஆண்டும் தசரா பண்டிகைக்கு முன்னதாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு ரெயில்வே அமைச்சகம் ரெயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தி தொடர்பான போனசாக 78 நாள் சம்பளம் வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது. இன்று நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தில் ரெயில்வே ஊழியர்களுக்கு 2012–13–ம் ஆண்டுக்கான போனசாக 78 நாள் சம்பளத்தை வழங்க அனுமதி வழங்கியது.
ரூ.1043.43 கோடி
அரசிதழ் பதிவு பெறாத ரெயில்வே ஊழியர்கள் அனைவரும் இந்த போனசை பெற தகுதியானவர்கள். இந்த அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் உள்ள 12 லட்சம் ரெயில்வே ஊழியர்கள் இந்த பலனை அடைவார்கள்.
சிறந்த நிதி நிர்வாகத்தை கணக்கில் கொண்டு ஊழியர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஒரு சிறப்பு நிகழ்வாக இந்த 78 நாள் சம்பள போனஸ் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சுமார் ரூ.1043.43 கோடி போனசாக வழங்கப்படும் என்று அரசு அறிக்கையில் கூறியுள்ளது.
வருவாய் அதிகரிப்பு
சம்பள உச்சவரம்பு படி ரூ.3,500 மாத சம்பளம் பெறும் ஒரு ஊழியர் போனசாக ரூ.8.975 பெறுவார்.
2012–13–ம் ஆண்டு மொத்த ரெயில்வே போக்குவரத்து கட்டண வருவாய் ரூ.1.24 லட்சம் கோடி. இது கடந்த ஆண்டை விட 18.85 சதவீதம் அதிகமாகும். 2011–12ம் ஆண்டில் இந்த வருவாய் ரூ.1.04 லட்சம் கோடியாக இருந்தது.
கூடுதலாக கேட்டன
ரெயில்வே தொழிற்சங்கங்கள் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலான நாட்கள் சம்பளம் போனசாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தின. கடந்த காலங்களில் இதைவிட அதிக நாட்கள் சம்பளம் போனசாக வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் மொத்தம் 13.26 லட்சம் ரெயில்வே ஊழியர்கள் இருந்தாலும், 1.26 லட்சம் அதிகாரிகளுக்கு இந்த போனஸ் கிடைக்காது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.