Pages

Tuesday, October 15, 2013

எம்.பி.பி.எஸ்., படிப்பில் கூடுதலாக 410 பேர் சேர்ப்பு: மருத்துவ கல்வி இயக்ககம் தகவல்

"அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, கடந்த ஆண்டை விட, 410 மாணவர் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்" என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


தமிழகத்தில், கடந்த ஆண்டில், 18 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வந்தன. இதில், 2,145 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு மாணவர் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டில், கூடுதலாக, 310 இடங்களை அதிகரித்து, இந்திய மருத்துவக் கழகம் அனுமதி அளித்தது. இதன்படி, சென்னை மருத்துவக் கல்லூரி 85; ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி 100; அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி 25; தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி50 மற்றும் கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி 50, இடங்கள் என, ஐந்து கல்லூரிகளில், 310 இடங்கள் கூடுலாக கிடைத்தன.

இதுதவிர, திருவண்ணாமலையில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கவும், 100 இடங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்தது. இதன் மூலம் கடந்த ஆண்டைவிட, 410 எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குனர் கனகசபை கூறுகையில், "மொத்தமுள்ள, 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 2,555 பேரும்; 13 தனியார் மருத்துவக் கல்லூரிகளில், 1,560 பேர் என, மொத்தம், 4,115 பேர், தமிழகத்தில் முதலாமாண்டு எம்.பி.பி.எஸ்., படிப்பைத் தொடங்கியுள்ளனர்" என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.