இந்த ஆண்டு, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்க வல்லுநர்கள் மூன்று பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மருத்துவம், இயற்பியல், ரசாயனம், இலக்கியம், சமூக சேவை, பொருளாதாரம் ஆகிய துறைகளில், சாதனை படைத்தவர்களுக்கு, நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு, அனைத்து துறைகளுக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டு விட்டது. நேற்று இறுதியாக, பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவை சேர்ந்த மூன்று பொருளாதார வல்லுநர்களுக்கு அறிவிக்கப்பட்டது. சொத்து விலை குறித்த அனுபவ பகுப்பாய்வுக்காக, லார்ஸ் பீட்டர் ஹான்சென், யுஜெனி பேமா, ராபர்ட் ஷில்லர் ஆகியோர் இந்த பரிசை கூட்டாக பெற உள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.