பள்ளி மாணவர்களை எச்சரித்த தலைமை ஆசிரியரை தாக்கிய, மூன்று வாலிபர்களை, போலீஸார் கைது செய்தனர்.
அரக்கோணம் அடுத்த, நாகவேடு அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவிக்குமார், 50. சில நாட்களுக்கு முன், இங்கு படிக்கும் ப்ளஸ் 1 மாணவர்கள் சிலர் தனியார் பஸ்சில் டிக்கட் எடுக்காமல் சென்றுள்ளனர். கண்டக்டர் கேட்டதற்கு, அவருடன் தகராறு செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தலைமை ஆசிரியர் ரவிக்குமார், சம்பந்தப்பட்ட மாணவர்களை எச்சரித்துள்ளார். கடந்த, 11ம் தேதி ரவிக்குமார் பள்ளியில் தன் அறையில் இருந்தார். அப்போது அங்கு வந்த, மூன்று வாலிபர்கள் ரவிக்குமாரை அடித்து விட்டு, ஓடி விட்டனர். ரவிக்குமார் கொடுத்த புகார் படி, அரக்கோணம் தாலுகா போலீஸார் விசாரித்து, அரக்கோணம் மங்கம்மா பேட்டையைச் சேர்ந்த முணியாண்டி, 22, கமலக்கண்ணன், 23, கிருஷ்ண மூர்த்தி, 21 நேற்று கைது செய்தனர்.
விசாரணையில், மாணவர்களை எச்சரித்தால், அவர்களின் நண்பர்கள் தலைமை ஆசிரியர் ரவிக்குமாரை தாக்கியது தெரியவந்தது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.