Pages

Sunday, October 13, 2013

முதுகலை ஆசிரியர் தேர்வு: காரைக்குடி ஆசிரியர் 2ம் இடம்

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், காரைக்குடியை சேர்ந்த ஆசிரியர் மூர்த்தி, ஆங்கிலத்தில், மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தார்.


ஆசிரியர் தேர்வு வாரியத்தால், கடந்த ஜூலை 21ம் தேதி, தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வணிகவியல் உட்பட பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு, முதுகலை ஆசிரியர் தேர்வு நடந்தது. தமிழை தவிர மற்ற பாடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

ஆங்கில பாடத்தில், காரைக்குடி கழனிவாசலை சேர்ந்த மூர்த்தி என்பவர் 150க்கு 102 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இவர் தற்போது, ராஜராஜன் பொறியியல் கல்லூரியில், பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.