ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த மாதம் 17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்தது. இதில் இடைநிலை ஆசிரியர் தேர்வை 2 லட்சத்து 67 ஆயிரத்து 950 பேர் எழுதினர்.
இதுபோல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை 4 லட்சத்து 11 ஆயிரத்து 600 பேர் எழுதினர். இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வு 1060 மையங்களில் நடந்தது. தேர்வு விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி நிறைவு பெற்றுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. எனவே, இன்னும் 10 நாட்களில் தேர்வு முடிவுகளை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண் டுள்ளது.தேர்வு முடிவுகள் வெளியான உடன் நேர்காணல் நடத்தி, சான்றிதழ் சரிபார்த்த பின்னர் உடனடியாக ஆசிரியர் பணிக்கான நியமன உத்தரவு வழங்கப்பட உள்ளது. இதில், சுமார் 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் வரை நிரப்ப வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.