ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த மாதம்17 மற்றும் 18–ந் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. இடை நிலை ஆசிரியர்களுக்கான தேர்வை2லட்சத்து67ஆயிரத்து950 பேர் 677மையங்களில் எழுதினார்கள். இவர்களில்17ஆயிரத்து974பேர் மாற்றுத்திறனாளிகள். பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை 4லட்சத்து11ஆயிரத்து600பேர்1060மையங்களில் எழுதினார்கள்.தேர்வு எழுதிய காட்சி வீடியோ எடுக்கப்பட்டது.
தேர்வு முடிவு உடனடியாக வெளியிடப்பட இருந்தது. ஆனால் முதுகலை பட்டதாரிகள் பணிக்கான எழுத்துத்தேர்வில் தமிழ் தேர்வில் உள்ள வினாத்தாளில் எழுத்து பிழை இருந்தது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்தது. இதன் காரணமாக ஆசிரியர் தகுதி தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி பாதிக்கப்பட்டது. பின்னர் தமிழ் பாடம் தவிர மற்ற பாடங்களுக்கான முதுகலை பட்டதாரி பணிக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.
10நாட்களுக்குள் முடிவு
ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணி முடிந்துவிட்டது. தற்போது சரி பார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.90சதவீத பணிகள் முடிந்துவிட்டன. எப்படியும் இன்னும்10நாட்களுக்குள் தேர்வு முடிவை வெளியிட அதற்கான பணியில் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் உள்ளனர்.
please say conformation date
ReplyDeleteIS ANY UNIT TRANSFER FOR THIS YEAR?
ReplyDeleteIn tha week
ReplyDelete