ஆசிரியர் தகுதித் தேர்வில் 150 க்கு 90 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றவர்கள் அனைவருமே ஆசிரியர் பணிக்கு தகுதியுள்ளவர்கள். இருப்பினும் தமிழகத்தை பொறுத்தவரை இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் செய்யும் முறை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு வேலை வாய்ப்பில் உள்ள முன்னுரிமை அடிப்படையில் ரேங்க் எண் வழங்கப்படும்.
அதே சமயம் காலி பணியிடங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு அவற்றில் சாதிவாரியான இடஒதுக்கீடு அடிப்படையில் நிரப்ப வேண்டிய பணியிடங்களின் எண்ணிக்கை இறுதி செய்யப்படும்.
பிறகு ரேங்க் எண் அடிப்படையிலும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அடிப்படையிலும் (வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்பது விதவை மற்றும் இராணுவத்தினரின் மனைவி போன்ற அனைத்து பிரையாரிட்டியும் அடங்கியது) பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும்.
இடைநிலை ஆசிரியர் பணியிடம் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் கடந்த முறை நடைபெற்றது. அவற்றில் தேர்ச்சி பெற்ற பெரும்பாலோர் எந்த ஆண்டு வேலை வாய்ப்பில் பதிவு செய்தவர்கள் என இதுவரை அரசு அறிவிக்காததால் தற்போது அதற்கு பின்னர் எந்த ஆண்டு வரை பதிவு செய்தவர்களுக்கு இடைநிலை ஆசிரியர் பணி கிடைக்கும் என கணக்கிட இயல வில்லை.
ஆனாலும் அதிகபட்சமாக 3000 முதல் 5000 பணியிடங்கள் வரை நிரப்பப்படலாம் என தோராயமாக எதிர்பார்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு தேர்ச்சி பெற்ற சான்றிதழ் மட்டும் அனுப்பி வைக்கப்படும். அடுத்த 7 ஆண்டுகளுக்கு இதே தேர்ச்சி மதிப்பெண் சான்றிதழை கொண்டு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு வாய்ப்பிருந்தால் பணி வாய்ப்பும் பெறலாம். இல்லையேல் அடுத்தடுத்த ஆசிரியர் தகுதி தேர்வுகளை எழுதி அடுத்த அதிக வெயிட்டேஜ் மதிப்பெண் பெற முயற்சிக்கலாம். (காரணம் – வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் என்பதற்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் பட்சத்தில் வெயிட்டேஜ் அடிப்படையில் பணி நியமனம் நடக்கும். அப்போது இந்த மதிப்பெண் உயர்வு பயன்படும்.)
நன்றி!
இங்கு நாம் வழங்கியுள்ள விவரங்கள் அனைத்துமே டி.ஆர்.பியின் தற்காலிக விடைகளின் அடிப்படையில் தேர்ச்சிபெற்றுள்ளதாக நம்முடன் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட பல்வேறு தேர்வர்களினுடைய கருத்துகளின் தொகுப்பே ஆகும். பல்வேறு காரணிகளின் அடிப்படையில் அமைந்துள்ள இக்கட்டுரை ஒரு எதிர்பார்க்கப்படும் கருத்துகணிப்பு மட்டுமே தவிர இறுதியானது அல்ல என தங்களுக்கு தெளிவுபடுத்துகிறோம். இக்கட்டுரை அமைக்க நமக்கு உதவிய பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நண்பர்கள், தேர்வர்கள் அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.